வங்கதேசத்தை 8 விக்கெட்டுகளில் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் @ மகளிர் டி20 உலகக் கோப்பை
வெள்ளி, 11 அக்டோபர், 2024
ஷார்ஜா: நடப்பு மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்று ஆட்டத்தில் வங்கதேசத்தை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தி உள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
ஷார்ஜாவில் நடைபெற்ற குரூப்-பி ஆட்டத்தில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி பந்து வீசியது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளில் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் நிகர் சுல்தானா 39 ரன்கள் எடுத்திருந்தார். மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கரிஷ்மா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்