2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா யு-19 அணி வெற்றி
வியாழன், 10 அக்டோபர், 2024
சென்னை: ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட்போட்டியில் இந்தியா யு-19 அணிஇன்னிங்ஸ் மற்றும் 120 ரன்கள்வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்தடெஸ்ட் போட்டியில் இந்தியா யு-19 அணி முதல் இன்னிங்ஸில் 492ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா யு-19 அணி 80.2 ஓவர்களில்277 ரன்களுக்கு ஆட்டமிழந்துபாலோ-ஆன் ஆனது. 215 ரன்கள்பின்தங்கிய நிலையில் நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்துவிளையாடிய ஆஸ்திரேலியா யு-19அணி 31.3 ஓவர்களில் 95 ரன்களுக்குசுருண்டது. இன்னிங்ஸ் மற்றும் 120ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்