இஸ்லாமிய படிப்புக்கான நுழைவு தேர்வில் இந்து மாணவர் முதலிடம் பிடித்து சாதனை
புதன், 18 நவம்பர், 2020
நாட்டில் இஸ்லாமிய படிப்புகளில் சேர்வதற்காக பொது நுழைவுத் தேர்வை மத்திய பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற பொது நுழைவுத் தேர்வில் இந்து சமூகத்தைச் சேர்ந்த மாணவர் சுபம் யாதவ் (21) முதலிடம் பிடித்துள்ளார்.
இந்த நுழைவுத் தேர்வில் முதலிடம் பிடித்த முஸ்லிம் அல்லாத முதல் மாணவர் இவரேயாவார். டெல்லி பல்கலைக்கழகத்தில் தத்துவஇயல் பட்டதாரியான இவர் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியைச் சேர்ந்தவர்.
source https://www.hindutamil.in/news/india/602672-hindu-students-got-first-mark-in-islamic-studies.html?frm=rss_more_article