இந்தியாவில் கரோனா பாதிப்பு 91 லட்சத்தை நெருங்கியது: குணமடைந்தோர் எண்ணிக்கை 85 லட்சத்தைக் கடந்தது
ஞாயிறு, 22 நவம்பர், 2020
இந்தியாவில் கரோனா பாதிப்பு 91 லட்சத்தை நெருங்குகிறது. அதேசமயம், கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 85 லட்சத்தைக் கடந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 209 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 90 லட்சத்து 95 ஆயிரத்து 806 ஆக அதிகரித்துள்ளது.
source https://www.hindutamil.in/news/india/604132-covid-19-caseload-in-india-reaches-90-95-lakh.html?frm=rss_more_article