2021-ல் 5 டெஸ்ட் போட்டியில் விளையாட இங்கிலாந்து செல்கிறது இந்திய கிரிக்கெட் அணி

2021-ல் 5 டெஸ்ட் போட்டியில் விளையாட இங்கிலாந்து செல்கிறது இந்திய கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது.

அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் ஆட்டங்களுக்கான அட்டவணையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஜூன் மாதம் இலங்கை அணி 3 ஒரு நாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. பிறகு ஜூலையில் பாகிஸ்தான் அணி தலா 3 ஒரு நாள், டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதன்பின்னர் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் இந்திய அணி இங்கிலாந்து சென்று அந்த அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel