கரோனா ஊரடங்கு காலத்தில் 1.7 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் சரிவு

கரோனா ஊரடங்கு காலத்தில் 1.7 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் சரிவு

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நாடு முழுவதும் 116 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் இருந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த எண்ணிக்கை 117 கோடியாக உயர்ந்தது. கடந்த மார்ச் மாத நிலவரத்தின்படி நாடு முழுவதும் 115 கோடியே 70 லட்சம் செல்போன் வாடிக்கையாளர்கள் இருந்தனர்.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. கடந்த மே மாதம் வரை பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தளர்வுகள் அமல் செய்யப்பட்டன. ஜூன் மாத நிலவரப்படி நாடு முழுவதும் 114 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில் கிராமங்களில் 52.1 கோடி செல்போன் இணைப்புகளும் நகரங்களில் 61.9 கோடி செல்போன் இணைப்புகளும் உள்ளன. கரோனா ஊரடங்கு காலத்தில் மட்டும் 1.7 கோடி வாடிக்கையாளர்கள் குறைந்துள்ளனர்.



source https://www.hindutamil.in/news/india/603023-mobile-users.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel