தாய், தந்தையின் கல்லறைக்கு அருகில் அரசு மரியாதையுடன் நடிகர் புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம்: நெற்றியில் முத்தமிட்டு விடை கொடுத்த கர்நாடக முதல்வர் பசவராஜ்
திங்கள், 1 நவம்பர், 2021
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உடல் கர்நாடக அரசின் முழு மரியாதையுடன் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க கண்டீரவா ஸ்டுடியோவில் அவரது தாய், தந்தையின் கல்லறைக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் இளையமகனும், முன்னணி நடிகருமான புனித் ராஜ்குமார் (46) கடந்த 29-ம் தேதி பெங்களூருவில் மாரடைப்பினால் காலமானார். அவரது திடீர் மறைவு கன்னட திரையுலகினரை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கர்நாடக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது இறப்பினை தாங்க முடியாமல் பெலகாவியில் 2 ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
source https://www.hindutamil.in/news/india/732990-last-rites-of-puneeth-rajkumar.html?frm=rss_more_article