காஷ்மீரில் 21-வது நாளாக அடர்ந்த காட்டில் தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்கிறது: மூடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை திறப்பு
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் அருகே பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகளுடன் கடந்த அக்டோபர் 11-ம் தேதி என்கவுன்ட்டர் நடைபெற்றது. அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் சூரன்கோட் அருகே உள்ள அடர்ந்த வனப் பகுதிக்கும் ரஜவுரி மாவட்டம் தானமண்டி பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்கும் தப்பியோடினர்.
அந்தப் பகுதிகளில் தீவிரவாதி களை தேடும் பணி அன்றைய தினமே முடுக்கி விடப்பட்டது. இதற்கிடையில், பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி ஜம்மு - ரஜவுரி இடையே தேசிய நெடுஞ்சாலை அக்டோபர் 15-ம் தேதி மூடப்பட்டது. தீவிரவாதிகள் மறைந்துள்ள காட்டுப் பகுதி வழியாக இந்த நெடுஞ்சாலை செல்வதால் மூடப்பட்டது. இதற்கிடையில், தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை நேற்று 21-வது நாளாக தொடர்ந்து நடைபெற்றது.
source https://www.hindutamil.in/news/india/732992-the-search-for-militants-in-the-dense-jungle-continues-for-the-21st-day-in-kashmir.html?frm=rss_more_article