விளையாட்டாய் சில கதைகள்: சிக்சர் மன்னனின் பிறந்த நாள்

விளையாட்டாய் சில கதைகள்: சிக்சர் மன்னனின் பிறந்த நாள்

2007-ல் நடந்த டி20 உலகக் கோப்பை, 2011-ல்நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகியவற்றில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வ தற்கு முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். குறிப்பாக டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அவர் அடித்த 6 சிக்சர்களை, கிரிக்கெட் ரசிகர்கள் மறக்கவே முடியாது. அந்த சிக்சர் மன்னனின் பிறந்தநாள் இன்று (டிசம்பர் 12).

40 டெஸ்ட்களில் 1,900 ரன்கள், 304 ஒருநாள் போட்டிகளில் 8,701 ரன்கள், 58 டி20 போட்டிகளில் 1,177 ரன்கள் என்று ரன் மழையால் ரசிகர்களை நனைத்தவர் யுவராஜ் சிங். பந்துவீச்சிலும் மாயாஜாலம் செய்தவர். யுவராஜின் அப்பா யோக்ராஜ் சிங்கும் ஒரு கிரிக்கெட் வீரர்தான். ஹரியாணாவைச் சேர்ந்த கபில்தேவும், யோக்ராஜ் சிங்கும் ஒரே சமயத்தில் வாய்ப்பு தேடி கிரிக்கெட் வாரியத்தின் கதவுகளைத் தட்டினர். இருவரில் ஒருவருக்குதான் எதிர்காலம் என்றிருந்த நிலையில், தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கபில்தேவ் புகழின் உச்சிக்கு சென்றார். யோக்ராஜோ, 1981-ல் இந்திய அணிக்காக ஆடுவதற்கு கிடைத்த வாய்ப்பில் ஒரே விக்கெட்டை மட்டும் எடுத்ததால், அணியில் மீண்டும் சேர்க்கப்படாமல் ஒதுக்கப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel