டெல்லி - அயோத்தி இடையே புல்லட் ரயில் இயக்க திட்டம்
பாபர் மசூதி - ராமர் கோயில் நிலப் பிரச்சினையில் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு அயோத்திக்கு அதிக முக்கியத்
துவம் அளிக்கப்படுகிறது. இங்குகட்டப்படும் ராமர் கோயிலுக்கு பக்தர்கள் திரளாக வந்து செல்லும் வகையில் பல்வேறு வசதிகள் மத்திய அரசு மற்றும்உத்தரபிரதேச அரசால் செய்யப்படுகின்றன.
இந்த வகையில், டெல்லியில் இருந்து அயோத்திக்கு பக்தர்கள் விரைவாக வந்து செல்லும்வகையில் புல்லட் ரயில் இயக்க திட்டமிடப்படுகிறது. நாட்டில் புல்லட் ரயில் இயக்க மத்திய அரசால் நிறுவப்பட்டுள்ள தேசிய அதிவிரைவு ரயில் கார்ப்பரேஷன் (என்எச்எஸ் ஆர்சி) இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க உள்ளது. டெல்லியை ஒட்டி, உத்தரபிரதேசத்தின் ஜேவரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அயோத்திக்கு புல்லட்ரயில் புறப்படும். இந்த வழித்தடத்தில் மதுரா, ஆக்ரா, கான்பூர்,பிரயாக்ராஜ், வாரணாசி உள்ளிட்ட நகரங்கள் இடம்பெறும்.
source https://www.hindutamil.in/news/india/609742-bullet-train.html?frm=rss_more_article