விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: பத்ம பூஷன் விருதை திருப்பி அளித்தார் பிரகாஷ் சிங் பாதல்: சுக்தேவும் பத்ம விருதை அரசிடம் வழங்க முடிவு
வெள்ளி, 4 டிசம்பர், 2020
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் வலுத்துவரும் நிலையில், பஞ்சாப் முன்னாள் முதல்வரும், அகாலி தளம் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் மத்திய அரசு வழங்கிய பத்ம பூஷன் விருதை திருப்பி வழங்கினார்.
அதுமட்டுமல்லாமல் அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சுக்தேவ் சிங் திண்சாவும் தனக்கு வழங்கிய பத்ம பூஷன் விருதை திருப்பி வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
மேலும், பஞ்சாப், சண்டிகரைச் சேர்ந்த பல விளையாட்டு வீரர்களும் மத்திய அரசு வழங்கிய விருதுகளை திருப்பி வழங்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.
source https://www.hindutamil.in/news/india/608102-parkash-singh-badal-returns-padma-award-over-farm-laws-dissident-sad-leader-dhindsa-to-follow-suit.html?frm=rss_more_article