சமாஜ்வாதி, பிஎஸ்பி, காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஒவைஸி கட்சிகள் தனித்தனியாகப் போட்டி: உ.பி. தேர்தலில் எதிர்க்கட்சிகள் வாக்குகள் பிரிவது உறுதி
வரும் 2022-ம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக.வுக்கு சாதகமாக வாக்குகள் பிரிவது உறுதியாகி வருகிறது. இங்கு புதிதாக அசாதுதீன் ஒவைஸி அணி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி), காங்கிரஸ்மற்றும் ஆம் ஆத்மி என தனித்தனியாக போட்டியிட உள்ளன.
ராஜ்பர் எனும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்காக, ஓம் பிரகாஷ் ராஜ்பர் என்பவரால் செயல்பட்டு வருகிறது சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி). இது, கடந்த முறை சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியில் 8 இடங்களில் போட்டியிட்டு நான்கு தொகுதிகளை பெற்றிருந்தது. உத்தர பிரதேசத்தின் கிழக்கு பகுதியிலுள்ள 11 மாவட்டங்களில் செல்வாக்கு கொண்ட இக்கட்சி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக.வின் வெற்றிக்கும் உதவியாக இருந்தது. இதனால் உத்தர பிரதேசமாநில அமைச்சராகவும் இருந்தஒம் பிரகாஷ், கடந்த ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து விலகினார். பிறகுமக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டவருக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிடைக்கவில்லை.
source https://www.hindutamil.in/news/india/613343-up-election.html?frm=rss_more_article