சீன இறக்குமதிகளுக்கு மாற்றான உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை அடையாளம் காண வேண்டும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கருத்து
திங்கள், 14 டிசம்பர், 2020
சுயசார்பு பொருளாதாரமாக வளர சீனப் பொருட்களுக்கு மாற்றான உள்நாட்டு தயாரிப்புகளை அடையாளம் காண வேண்டும் என்று மத்திய சிறு, குறு தொழில் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
தொழில் துறை கூட்டமைப்பு களில் ஒன்றான ஃபிக்கி-யின்93-வது ஆண்டு பொதுக் கூட்டம்,காணொலி மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் எம்எஸ்எம்இ துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘சுயசார்பு பொருளாதாரம் என்ற இலக்கை எட்ட இறக்குமதியை குறைக்க வேண்டி இருக்கிறது. குறிப்பாக சீன பொருட்களுக்கு மாற்றாக இந்திய தயாரிப்புகளை அடையாளம் காண வேண்டும்’’ என்றார்.
source https://www.hindutamil.in/news/india/611569-nithin-gadkari.html?frm=rss_more_article