ஆறு மாதங்களில் 30 கோடி பேருக்கு கரோனா தடுப்பு மருந்து விநியோகம்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்
ஞாயிறு, 20 டிசம்பர், 2020
மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் இணைந்து உள்நாட்டிலேயே பிரத்யேக தடுப்பு மருந்து உருவாக்கி உள்ளனர். இந்தத் தடுப்பு மருந்துகள் இந்தியாவில் அடுத்த 6-7 மாதங்களில் 30 கோடி பேருக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.
கரோனா தடுப்பு குறித்த 22-வதுஅமைச்சர்கள் கூட்டத்தில் பேசியபோது அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர் கூறும்போது, ‘‘இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு கோடி பேருக்கு கரோனா பாதிப்புஏற்பட்டுள்ளது. இதில் 95 லட்சத்துக்கும் மேலானோர் குணமடைந்துள்ளனர். உலகிலேயே இந்தியாவில்தான் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் விகிதம் அதிகபட்சமாக 95.46 சதவீதமாக உள்ளது’’ என்றார்.
source https://www.hindutamil.in/news/india/613706-covid-vaccine.html?frm=rss_more_article