ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: ஹைதராபாத் அணிக்கு முதல் தோல்வி; மும்பையிடம் 2-0 என்ற கணக்கில் வீழ்ந்தது
திங்கள், 21 டிசம்பர், 2020
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் மும்பை அணியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது ஹைதராபாத் அணி. இந்த சீசனில் ஹைதராபாத் அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்தது.
கோவாவில் உள்ள திலக் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 38-வது நிமிடத்தில் மும்பை அணி முதல் கோல் அடித்தது. வலது டச்லைனில் இருந்து 120 அடி தூரத்தை கடந்து அகமது ஜஹூவு ஹைதராபாத் அணியின் பாக்ஸ் பகுதி இடது பக்கத்தில் இருந்த பிபின் சிங்குக்கு பந்தை உதைத்தார். அவர் நொடிப்பொழுதில் பாக்ஸின் மையப் பகுதியில் இருந்த விக்னேஷ் தட்சிணாமூர்த்திக்கு பாஸ் செய்ய, அவர் அதனை அபாரமாக கோல் வலைக்குள் செலுத்தினார். இதனால் மும்பை அணி முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்