விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம்- பேருந்துகள், ரயில்கள் வழக்கம்போல இயங்கும் என அறிவிப்பு
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. போராட்டம் காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணிக்கு நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத் துக்கு 18 கட்சிகள் ஆதரவு அளித்துள்ள நிலையில், பேருந்துகளும் ரயில்களும் வழக்கம்போல இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு நாடுமுழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய சட்டங்களில் வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதை மறுத்துள்ள மத்திய அரசு, புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் இருமடங்கு அதிகரிக்கும் என்று விளக்கம் அளித்துள்ளது. ஆனாலும், அதை ஏற்க மறுத்து விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
source https://www.hindutamil.in/news/india/609329-farmers-protest.html?frm=rss_more_article