விவசாயிகள் புராரி மைதானத்துக்குச் சென்றவுடன் பேச்சுவார்த்தையை அரசு தொடங்கும்: மத்திய அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள்
ஞாயிறு, 29 நவம்பர், 2020
டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் புராரி மைதானத்துக்குச் சென்றவுடன், பேச்சுவார்த்தையை அரசு தொடங்கும். பனிக்காலத்தில் விவசாயிகள பெரும் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான வசதிகள் புராரி மைதானத்தில் செய்யப்பட்டுள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
source https://www.hindutamil.in/news/india/606446-shah-appeals-farmers-to-go-to-burari-ground-says-ready-to-hold-talks-as-soon-as-they-shift.html?frm=rss_more_article