ரயில் மறியல் போராட்டத்தை நாளை முதல் கைவிட பஞ்சாப் விவசாயிகள் முடிவு
ஞாயிறு, 22 நவம்பர், 2020
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் விவசாயிகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் சரக்கு ரயில்கள், பயணிகள் ரயில்கள் என எதுவும் இயக்கப்படாததால், அம்மாநிலத்தின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடும் விவசாய அமைப்புகளிடம் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், ரயில் மறியல் போராட்டத்தை நாளை முதல் 15 நாட்களுக்கு கைவிடுவதாக விவசாய அமைப்புகள் அறிவித்தன. இந்த 15 நாட்களுக்குள், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால், மீண்டும் ரயில் மறியல் போராட்டம் தொடங்கப்படும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
source https://www.hindutamil.in/news/india/604093-punjab-farmers.html?frm=rss_more_article