10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற தீவிரவாதி ஹபீஸ் சயீதை ரகசியமாக வீட்டுக்கு அனுப்பிய பாகிஸ்தான் அரசு: இந்திய புலனாய்வுத் தகவல்கள் மூலம் அம்பலம்

10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற தீவிரவாதி ஹபீஸ் சயீதை ரகசியமாக வீட்டுக்கு அனுப்பிய பாகிஸ்தான் அரசு: இந்திய புலனாய்வுத் தகவல்கள் மூலம் அம்பலம்

தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளித்த வழக்கில், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ஹபீஸ் சயீதை ரகசியமாக பாகிஸ்தான் அரசு வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது. புலனாய்வுத் தகவல்கள் மூலம் இது அம்பலமாகி உள்ளது.லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பை உருவாக்கியவர் ஹபீஸ் சயீது. இந்த அமைப்பை ஐ.நா.வும், அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகளும் தடை செய்துள்ளன. தீவிரவாத பட்டியலில் லஷ்கர் அமைப்பு முக்கிய இடத்தில் உள்ளது. மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு 10 தீவிரவாதிகள் ஊடுருவி பயங்கர தாக்குதல் நடத்தினர்.

இதில் 166 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதலில் நேரடியாக சதி திட்டம் தீட்டி கொடுத்தவர் ஹபீஸ் சயீது. இவரை ஒப்படைக்கும்படி இந்தியா தொடர்ந்து பல ஆதாரங்களை அளித்தும் பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொள்ளவில்லை.



source https://www.hindutamil.in/news/india/605560-hafiz-saeed.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel