அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர்: சின்னர், ஸ்வியாடெக் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
திங்கள், 2 செப்டம்பர், 2024
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில்முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபர் ஓ’கான்னெல்லுடன் மோதினார். இதில் ஜன்னிக் சின்னர் 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். 14-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டாமி பால் 6-7 (5-7), 6-3, 6-1, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் கனடாவின் கேப்ரியல் டயலோவையும், 5-ம் நிலை வீரரானரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ் 6-3, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் 31-ம் நிலை வீரரான இத்தாலியின் ஃபிளாவியோ கோபோலியையும் வீழ்த்தினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்