ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நவ்தீப்: பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 29-வது பதக்கம்!
ஞாயிறு, 8 செப்டம்பர், 2024
பாரிஸ்: ஆடவர் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் இந்திய பாரா தடகள வீரர் நவ்தீப் சிங். இது பாரிஸ் பாராலிம்பிக்கில் இந்தியா வென்றுள்ள 7-வது தங்கமாக அமைந்துள்ளது.
எப்41 பிரிவில் அவர் தங்கம் வென்றுள்ளார். 23 வயதான அவர் டோக்கியோவில் தவறவிட்ட பதக்கத்தை பாரிஸில் வென்றுள்ளார். 47.32 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்திருந்தார் அவர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்