CWG 2022 நிறைவு | இந்தியாவுக்கு 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம்: பதக்கம் வென்ற வீரர்களின் முழு விவரம்
செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022
நடப்பு காமன்வெல்த் போட்டிகளுக்கான தொடர் இங்கிலாந்தின் பர்மிங்கம் நகரில் நிறைவு பெற்றுள்ளது. இதில் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் விளையாடிய இந்திய வீரர்களும், வீராங்கனைகளும் மொத்தமாக 61 பதக்கங்களை வென்றுள்ளனர். அது குறித்து விரிவாக பார்ப்போம்.
சுமார் 72 நாடுகளை சேர்ந்த 5054 விளையாட்டு வீரர்கள் 280 ஈவெண்ட்டுகளில் விளையாடி இருந்தனர். கடந்த ஜூலை 29 தொடங்கிய இந்த விளையாட்டு தொடர் ஆகஸ்ட் 8-ம் தேதியுடன் நிறைவு பெற்றுள்ளது. இதில் இந்தியா சார்பில் 106 வீரர்கள் மற்றும் 104 வீராங்கனைகள் என மொத்தம் 210 பேர், 16 விதமான விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்று விளையாடி இருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்