செஸ் ஒலிம்பியாட் | இணைய தொடரால் செஸ் மீது ஆர்வம்
புதன், 3 ஆகஸ்ட், 2022
சென்னை: செஸ் ஒலிம்பியாட்டில் மகளிர் பிரிவில் முதல் முறையாக களமிறங்கியுள்ள டல்லுலா ராபர்ட், ஜெர்சி அணிக்காக விளையாடி வருகிறார். ஜெர்சி நாட்டில் இருந்து பங்கேற்றுள்ள 8 வீரர்களில் டல்லூலா ராபர்ட் மட்டுமே இஎல்ஓ ரேட்டிங் புள்ளிகளை கொண்டுள்ளார். ஆச்சர்யம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், 2020-ம் ஆண்டு வரை டல்லுலா ராபர்ட்டுக்கு செஸ் மீது விருப்பமே கிடையாதாம். திடீரென ஒருநாள் செஸ் போட்டியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட ‘குயின் காம்பிட்’ என்ற இணையதள தொடரை டல்லுலா ராபர்ட் பார்த்து செஸ் விளையாட தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து டல்லுலா ராபர்ட் கூறும்போது, “எங்கள் நாட்டில் செஸ் போட்டி பிரபலம் கிடையாது. எனது நோக்கமே இந்த போட்டியை எங்களது நாட்டில் முன்னேற்றம் அடையச் செய்வதுதான்” என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்