தனிநபர் பிரிவில் டி.குகேஷ், நிஹால் சரினுக்கு தங்கம் - 7 பதக்கங்களை அள்ளியது இந்தியா

தனிநபர் பிரிவில் டி.குகேஷ், நிஹால் சரினுக்கு தங்கம் - 7 பதக்கங்களை அள்ளியது இந்தியா

சென்னை: செஸ் ஒலிம்பியாட்டில் அணிகள் பிரிவு பதக்கங்கள் தவிர தனிநபர் பிரிவில் 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என 7 பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றனர்.

ஓபன் பிரிவில் இந்திய பி அணியின் டி.குகேஷ் முதல் போர்டில் 11 சுற்றுகள் விளையாடி 9 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதேபோன்று 2-வது போர்டில் விளையாடி நிஹால் சரின் 10 சுற்றுகளில்7.5 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் பெற்றார். அர்ஜுன் எரிகைசி 3-வது போர்டில் வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றார். ஆர். பிரக்ஞானந்தா (3-வது போர்டு), ஆர். வைஷாலி (3-வதுபோர்டு), தானியா சச்தேவ் (3-வதுபோர்டு), திவ்யாதேஷ்முக் (ரிசர்வ்போர்டு) ஆகியோர் தனிநபர் பிரிவில் வெண்கலம் வென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel