உ.பி. தேர்தலில் போட்டியில்லை: அகிலேஷ் யாதவ் அறிவிப்பு
உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலை சந்திக்க பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
வரும் உ.பி. தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன். எனினும், கட்சித் தலைமை இதுகுறித்து இறுதி முடிவு செய்யும். ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியுடன் எங்கள் கூட்டணி இறுதியாகிவிட்டது. தொகுதி பங்கீடு விரைவில் முடிவு செய்யப்படும். சமாஜ்வாதி கட்சியில் இருந்து வெளியேறி பிரகதிஷீல் சமாஜ்வாதி லோஹியா கட்சியைத் தொடங்கியுள்ள எனது சித்தப்பா சிவபால் சிங் யாதவின் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்படும். ஓம்பிரகாஷ் ராஜ்பரின் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியுடன் ஏற்கெனவே கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது.
source https://www.hindutamil.in/news/india/733347-akhilesh-says-not-contesting-in-up-elections.html?frm=rss_more_article