மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்குக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்
ஞாயிறு, 7 நவம்பர், 2021
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி நடத்தி வருகிறது. தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அனில் தேஷ்முக் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது, தொழிலதிபர்களிடம் இருந்து மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலித்து தர தேஷ்முக் வற்புறுத்தியதாக மும்பை காவல் முன்னாள் ஆணையர் பரம்வீர் சிங் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரத்தால் உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் அனில் தேஷ்முக் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் மீது சிபிஐ, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது.
source https://www.hindutamil.in/news/india/734847-14-days-judicial-custody-for-anil-deshmukh.html?frm=rss_more_article