பஞ்சாபில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ரூ.10 குறைக்க கோரி முதல்வர் வீட்டு முன் ஆர்ப்பாட்டம்
ஞாயிறு, 7 நவம்பர், 2021
பெட்ரோல், டீசல் விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்ததால் பெட்ரோல் விலை ரூ.5-ம், டீசல் விலை ரூ.10-ம் குறைந்துள்ளது. இதையடுத்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை பல்வேறு மாநிலங்கள் குறைத்துள்ளன. அதேவேளையில் பஞ்சாப், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்கள் இது தொடர்பாக இதுவரை முடிவு எடுக்கவில்லை.
இந்நிலையில் பஞ்சாபில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை லிட்டருக்கு ரூ.10 குறைக்க வேண்டும், பருத்தி விவசாயி களுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி சண்டிகரில் உள்ள முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி வீட்டு முன்பு ஷிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
source https://www.hindutamil.in/news/india/734849-protest-in-front-of-cm-house-in-punjab.html?frm=rss_more_article