இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 21 நீதிபதிகள்: குவியும் வழக்குகளால் திணறும் நீதித் துறை
ஞாயிறு, 7 நவம்பர், 2021
இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 10 லட்சம் பேருக்கு 21 நீதிபதிகள் என்ற விகிதாச்சாரம் உள்ள நிலையில், சுமார் 4.5 கோடி நிலுவை வழக்குகளால் இந்திய நீதித் துறை திணறி வருகிறது.
உச்ச நீதிமன்றம், 25 உயர் நீதிமன்றங்கள், 7,402 கீழமை நீதிமன்றங்களுடன் இந்திய நீதித் துறை செயல்படுகிறது. தேசிய நீதித் துறை தகவல் மைய கணக்கெடுப்புப்படி கீழமை நீதிமன்றங்களில் ஒரு கோடியே 56 ஆயிரத்து 411 சிவில் வழக்குகள், 2 கோடியே 77 லட்சத்து 11 ஆயிரத்து 220 கிரிமினல் வழக்குகள் என மொத்தம் 3 கோடியே 77 லட்சத்து 67 ஆயிரத்து 631 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 77% வழக்குகள் ஓராண்டுக்கு மேல் நிலுவையில் உள்ளன.
source https://www.hindutamil.in/news/india/734858-pending-cases-in-judicial-system.html?frm=rss_more_article