கேரளாவில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் இடிந்து விழுந்து அடித்துச் செல்லப்பட்ட வீடு: வீடியோ
திங்கள், 18 அக்டோபர், 2021
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தில் வீடு அப்படியே விழுந்து அடித்துச் செல்லப்பட்ட காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், கேரளாவில் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
source https://www.hindutamil.in/news/india/727654-house-collapses-into-river-in-kerala-amid-heavy-rain.html?frm=rss_more_article