ஐசிசி டி 20 உலகக் கோப்பை: அயர்லாந்து அணி வெற்றி; 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தினார் கேம்பர்
செவ்வாய், 19 அக்டோபர், 2021
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதற்கட்ட சுற்றில் நெதர்லாந்து அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அயர்லாந்து.
அபுதாபியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர்களில் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நெதர்லாந்து அணி சார்பில் அதிகபட்சமாக மேக்ஸ் ஓ டவுட் 51, பீட்டர் சீலார் 21 ரன்கள் எடுத்தனர். அயர்லாந்து தரப்பில் கர்டிஸ் கேம்பர் 10-வது ஓவரில் ஹாட்ரிக் சாதனை படைத்ததுடன் நான்கு பந்துகளில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்