மூதாட்டி குறித்து கங்கனா அவதூறு கருத்து: மன்னிப்பு கேட்க சீக்கிய அமைப்பு நோட்டீஸ்
சனி, 5 டிசம்பர், 2020
விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க வந்த மூதாட்டி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததற்காக, நடிகை கங்கனா ரனாவத் மன்னிப்பு கேட்க வேண்டும் என சீக்கிய அமைப்பு ஒன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்ற பில்கிஸ் பனோ என்ற 86 வயது மூதாட்டியை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இவர் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர் ஆவார்.
source https://www.hindutamil.in/news/india/608460-kangana-ranaut.html?frm=rss_more_article