சீரம் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்து விரைவில் வருகிறது: இந்தியாவில் அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்க கோரி மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு விண்ணப்பம்
திங்கள், 7 டிசம்பர், 2020
இந்தியாவில் தங்கள் நிறுவனத்தின் கரோனா தடுப்பு மருந்தை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்கும்படி இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக கரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உருவாக்கப்படும் மருந்துகள் பலகட்டப் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும்போது எதிர்பாராத பலனை அளிக்காமல் போவதும், அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுமாகவே இருந்தன.
source https://www.hindutamil.in/news/india/609099-serum-institute.html?frm=rss_more_article