காங்கிரஸ் மாணவர் அமைப்பின் நிர்வாகி ருச்சி குப்தா கட்சியில் இருந்து விலகினார்
ஞாயிறு, 20 டிசம்பர், 2020
நாட்டில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை அனைத்திலும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் கட்சியில் இருந்து வரிசையாக விலகி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் (காங்கிரஸின் மாணவர் அமைப்பு) இணைச் செயலாளராக பதவி வகித்து வந்த ருச்சி குப்தா, நேற்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். காங்கிரஸில் அமைப்பு ரீதியான மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தாமதம் ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
source https://www.hindutamil.in/news/india/613690-ruchi-gupta.html?frm=rss_more_article