அனைத்து தலைவர்களும் விரும்பினால் காங். கட்சிக்காக பணியாற்ற தயார்: சோனியா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் கருத்து
ஞாயிறு, 20 டிசம்பர், 2020
காங்கிரஸ் கட்சியின் அனைத்து மூத்த தலைவர்களும் விரும் பினால், கட்சிக்காக பணியாற்றத் தயார் என டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ராகுல் காந்தி தெரிவித்தார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகினார். சோனியா காந்தி, காங்கிரஸின் இடைக்கால தலைவரானார். அதன் பிறகு பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தொடர் தோல்வியால் கட்சியை பலப்படுத்த முழுநேரத் தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என கபில் சிபல், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட 23 மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.
source https://www.hindutamil.in/news/india/613683-rahul-gandhi.html?frm=rss_more_article