இந்திய அணிக்கு பின்னடைவு: டெஸ்ட் தொடரிலிருந்து முகமது ஷமி நீக்கம்: கோலியும் இல்லை
ஞாயிறு, 20 டிசம்பர், 2020
அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கம்மின்ஸ் பந்துவீச்சில் கை மணிக்கட்டில் காயமடைந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவித்துள்ளது.
அடிலெய்டில் நடந்த முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸில் 36ரன்களில் ஆல்அவுட் ஆகி மோசமான தோல்வியைச் சந்தித்தது. இந்தப் போட்டியில் ஆஸி. வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ் வீசிய பந்தை எதிர்கொண்ட முகமது ஷமிக்கு கை மணிக்கட்டில் பந்துபட்டது. அப்போது வலியால் துடித்த ஷமி, பேட்டை இறுகப்பிடிக்க முடியாமல் துடித்தார். அணியின் மருத்துவர் வந்து ஷமியின் கையில் வலிநிவாரண ஸ்ப்ரே அடித்தும் ஷமியால் பேட் செய்ய இயவில்லை
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்