விளையாட்டாய் சில கதைகள்: சச்சின் டெண்டுல்கரின் நம்பிக்கைகள்
செவ்வாய், 22 டிசம்பர், 2020
கிரிக்கெட் கடவுள் என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் வீரர் சச்சின் டெண்டுல்கர். இந்திய அணி எத்தனை இக்கட்டான நிலையில் இருந்தாலும் தனது உறுதியான பேட்டிங்கால் சச்சின் டெண்டுல்கர் அணியை மீட்டெடுப்பார் என்பது ரசிகர்களின் நம்பிக்கை. ஆனால் இப்படி எல்லோரும் நம்பும் சச்சின் டெண்டுல்கருக்கும் தனிப்பட்ட சில நம்பிக்கைகள் இருந்தது உண்டு. எப்போது பேட்டிங் செய்யக் கிளம்பினாலும், முதலில் தனது இடது காலில் பேடைக் கட்டிக்கொள்வது சச்சினின் வழக்கம்.
அதன் பிறகுதான் வலது காலில் பேடைக் கட்டுவார். அப்படி கட்டினால்தான் தன்னால் அதிக ரன்களைக் குவிக்க முடியும் என்று கிரிக்கெட் ஆடும் காலம் முழுவதும் அவர் நம்பினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்