விளையாட்டாய் சில கதைகள்: அமெரிக்காவின் முதல் கார் பந்தயம்

விளையாட்டாய் சில கதைகள்: அமெரிக்காவின் முதல் கார் பந்தயம்

அமெரிக்காவில் 1890-களில் கார்கள் அறிமுகமாகிக்கொண்டு இருந்த நேரம். தங்கள் செய்தித்தாள் சார்பில் ஒரு கார் பந்தயத்தை நடத்தினால் என்ன என்ற எண்ணம் ‘சிகாகோ டைம்ஸ் - ஹெரால்ட்’ என்ற செய்தித்தாள் நிறுவனத்துக்கு தோன்றியுள்ளது. அத்துடன் அமெரிக்காவில் கார்களை பிரபலப்படுத்த இந்த பந்தயம் உதவும் என்று கார் விற்பனையாளர்களும் நினைத்ததால் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் 1895-ம் ஆண்டு ஜூலை 10-ம் தேதி கார் பந்தயத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பந்தயத்தில் வெற்றி பெறுபவருக்கு 5 ஆயிரம் டாலர்கள் பரிசளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் இத்தொகை மிகவும் அதிகமாகும். இருப்பினும் அமெரிக்காவில் கார்கள் மிகவும் குறைவாக இருந்ததால், மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே இதில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel