பிஹாரிலும் லவ் ஜிகாத்தை தடுக்க சட்டம்: மத்திய அமைச்சர் கிரிராஜ் வலியுறுத்தல்
திங்கள், 23 நவம்பர், 2020
கட்டாய மதமாற்றம் மற்றும் லவ் ஜிகாத்தை தடுக்க கடுமையான சட்டம் கொண்டுவரப்படும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, பாஜக ஆளும் மத்திய பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநில அரசுகளும் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டன.
இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் நேற்று முன்தினம் கூறும்போது, “இப்போது சமூக நல்லிணக்கத்தை சீரழிக்கும் புற்றுநோயாக லவ் ஜிகாத் உருவெடுத்து வருகிறது. இதைத் தடுக்க சட்டம் கொண்டுவரப்படும் என பல மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இது மதவாத செயல் எனக் கூறுவதை விடுத்து, சமூக நல்லிணக்கத்தைக் காக்க பிஹார் அரசும் லவ் ஜிகாத்தை தடுக்க சட்டம் கொண்டுவர வேண்டும்” என்றார்.
source https://www.hindutamil.in/news/india/604383-minister-giriraj.html?frm=rss_more_article