டோக்லாமில் இருந்து 7 கி.மீ. தொலைவில் புதிதாக ஆயுத பதுங்கு குழிகளை அமைத்த சீன ராணுவம்
செவ்வாய், 24 நவம்பர், 2020
டோக்லாமில் இருந்து 7 கி.மீ. தொலையில் சீன ராணுவம் புதிதாக ஆயுத பதுங்கு குழிகளை அமைத்திருப்பது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
லடாக்கின் காரகோரத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் ஜாசப்லா வரை 3,488 கி.மீ. தொலைவுக்கு இந்திய - சீனா எல்லைப் பகுதி நீள்கிறது.கடந்த 2017 ஜூன் மாதம் இந்தியாவின் சிக்கிம் மாநிலம், பூடான், சீன எல்லைப் பகுதிகள் சந்திக்கும் டோக்லாமில் சீன ராணுவ வீரர்கள் அத்துமீற முயன்றனர். அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் போர்ப் பதற்றம் எழுந்தது. 72 நாட்களுக்குப் பிறகு சீன வீரர்கள் பின்வாங்கினர்.
source https://www.hindutamil.in/news/india/604735-chinese-army.html?frm=rss_more_article