மலபார் கூட்டு போர்ப் பயிற்சியில் இந்தியாவின் மிக்-29கே விமானங்கள் சாகசம்

மலபார் கூட்டு போர்ப் பயிற்சியில் இந்தியாவின் மிக்-29கே விமானங்கள் சாகசம்

இந்தியா மற்றும் அமெரிக்க கடற்படைகள், 1992-ல், முதன் முதலாக, இந்திய பெருங்கடலில் கூட்டு போர்ப் பயிற்சி மேற்கொண்டன. இது, மலபார் போர்ப் பயிற்சி என்று அழைக்கப்படுகிறது. இதில், 2015-ல் ஜப்பான் இணைந்தது. கடந்த ஆண்டு, ஜப்பான் கடலோரப் பகுதியில், போர்ப் பயிற்சி நடைபெற்றது. இந்தாண்டு, வங்கக் கடலில், விசாகப்பட்டினம் கடலோரத்தில் முதல் கட்டமாக, நவம்பர் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி தேதி வரை, மலபார் போர்ப் பயிற்சி நடைபெற்றது.

இரண்டாவது கட்டப் பயிற்சி, அரபிக் கடலில், நவம்பர் 17 முதல் 20 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 2-ம் கட்ட மலபார் போர்ப் பயிற்சி கடந்த 17-ல் தொடங்கி நேற்று முடிந்தது. இந்த ஆண்டு ஆஸ்திரேலிய கடற்படையும் இந்தப் பயிற்சியில் இணைந்துள்ளது. இந்திய - பசிபிக் பிராந்தியத்தில், அமைதியை பராமரித்து, சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்கு வழிவகை செய்ய, அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவை இணைந்து, 'குவாட்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த வகையில், முதல் முறையாக குவாட் நாடுகள் ஒன்றிணைந்து, மலபார் கூட்டு போர்ப் பயிற்சியை மேற்கொண்டன.



source https://www.hindutamil.in/news/india/603747-mig-29k.html?frm=rss_more_article

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel