உலகின் 100 சிறந்த நகரங்கள் பட்டியலில் 62-வது இடத்தில் டெல்லி
இந்தப் பட்டியலில் இந்திய தலைநகர் டெல்லி 62-வது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டுப் பட்டியலில் டெல்லி 81-வது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு 19 இடங்கள் முன்னேறியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள சிறந்த நகரங்களை தரவரிசைப்படுத்த அந்த இடங்களின் தரம், நற்பெயர் மற்றும் மிகவும் திறமையானவர்கள், சுற்றுலாப் பயணிகள், வணிகத் தலைவர்கள் ஆகியோரின் கருத்துகள் உள்ளிட்டவை அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றன. டெல்லி 62-வது இடத்தை பிடித்துள்ள செய்தியை, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருந்தார். இதனை முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மறு ட்வீட் செய்து வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லி மக்கள் அனைவருக்கும் இது நல்ல செய்தி. கடந்த 6 ஆண்டுகளில் டெல்லி மக்களின் கடின உழைப்பால் இது சாத்தியமாகி உள்ளது. டெல்லியில் ஏற்படும் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை உலகம் கவனிக்கிறது” என்றார்.
source https://www.hindutamil.in/news/india/604376-delhi.html?frm=rss_more_article